விஜயா செய்த வேலையால் முத்து வீட்டில் வெடிக்கும் கலவரம், சண்டை போட்டுக்கொள்ளும் மீனா, ஸ்ருதி-விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 2/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா வேலை செய்யும் இடத்தில் ரோகினியை பற்றி உண்மை தெரிந்து மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். அந்த சமயம் முத்து செய்த சாதனையை இணையத்தில் புகழ்ந்தார்கள். பின் ஸ்ருதியிடம் ரோகினி பற்றி மீனா சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் ரவியிடம் சொன்னார். ரவி அதிர்ச்சியாகி முத்துவிடம் சொன்னார். முத்து உடனே அண்ணாமலை இடம் சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் ரோகினியை பற்றி பேசி இருந்தார். உடனே விஜயா, கோபத்தில் ரோகினி இடம் சண்டை போட்டார்.

கடைசியில் ரோகினி, முதல் குழந்தை அபாசன் ஆகிவிட்டது என்று ஒரு புது கதையை சொல்லி இருந்தார். ரோகினி சொல்வதைக் கேட்டு எல்லோருமே நம்பி விடுகிறார்கள். பின் இதை எல்லாம் மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். கடந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்க, பயத்தில் மீனா கத்துகிறார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க நினைத்து, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்தி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

மீனா, வேண்டாம் என்று தடுத்தும், விடாமல் சுருதி பேய் போல் சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கடைசியில் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் பயங்கரமாக திட்டி இருந்தார். மறுநாள் ஸ்ருதி வெளியே வரும்போது மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று பயங்கரமாக திட்டி இருந்தார். இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விடுகிறார்கள்.

சீரியல் கதை:

மேலும், விஜயாவிற்கு கால் அடிபட்டதால் மீனா வருத்தப்பட்டு அவருக்காக வைத்தியம் ரெடி பண்ணி கொடுத்தார். இருந்தும் மீனாவை தான் விஜயா திட்டி இருந்தார்.பின் கிச்சனில் மீனா, அலமாரியில் ஏதோ தேடிக் கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது முத்து மீனாவை பிடித்து விட, மொத்த மாவு டப்பாவும் விஜயா மேல் விழுந்ததால் பார்ப்பதற்கு காமெடியாக இருந்தார். இதை ஸ்ருதி போட்டோ எடுத்து சோசியல் மீடியா போட்டுவிட்டார். உடனே ரோகினி, ஸ்ருதி- மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் சொல்ல, விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிற்கு போன் செய்து வர வைத்தார்.

இன்றைய எபிசோட்:

நடந்தை எல்லாம் ஸ்ருதி அம்மாவிடம் சொன்னார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா- சுருதி பற்றி தப்பு தப்பாக ரோகினி சொல்வதால் ஸ்ருதியின் அம்மாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து, உன்னால் தான் என் மகள் வாழ்க்கை கெட்டுப் போகிறது. அவளை விட்டு தள்ளி இரு. பணத்திற்காக இப்படி எல்லாம் செய்வாயா? என்று ரொம்ப கேவலமாக பேசுகிறார். இதற்கு மீனாவும் பதிலடி கொடுத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதன்பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொல்ல, அவர் கோபமாக வீட்டிற்கு வருகிறார். அப்போது சுருதி-முத்து இடையே சண்டை போட, உடனே ரவி சுருதிக்கு சப்போர்ட் செய்கிறார். இதனால் மீனா, தன் கணவருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடக்கிறது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்படுகிறார். ஆனால், அண்ணாமலைக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full