நகையை கேட்கும் பாட்டி, பயத்தில் இருக்கும் மனோஜ், பங்சனுக்கு வராமல் முத்து எங்கே போனார்? சிறகடிக்க ஆசை

By subhashini · 5/7/2024

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம். விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கலவரமே நடந்தது. இறுதியில் இந்த வீட்டை என் கணவர் கட்டுவார் என்று மீனா சபதம் போடுகிறார்.

சிறக்கடிக்க ஆசை :

கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிகிறது. அதையும் ஏமாற்றி விடுகிறார்கள். இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார். விஜயாவும் மீனாவின் நகையை கொடுக்க, மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார். பின் அண்ணாமலை, விஜயாவிடம் பேசி நகையை வாங்கி கொடுக்கிறார். ஆனால், கவரிங் நகையை தான் மனோஜ் ரெடி பண்ணி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்தார்.

சீரியல் கதை:

யாருக்கும் அந்த உண்மை தெரியாது. அந்த நகையை மீனாவும் நகைக்கடையில் காண்பிக்கிறார்கள். அது கவரிங் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி ஆகிறார்கள். இது பற்றி தன் அப்பாவிடம் கேட்க முத்து நினைக்கிறார். பாட்டி, தன் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாடட்டும் அதற்கு பின் கேட்காமல் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார் மீனா. ஆனால், அது மனோஜ் வேலை தான் என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார். வீட்டில் பாட்டியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். பின் ஒவொரு ஜோடியும் என்ன பரிசு வாங்கி கொடுப்பது குறித்து பேசி இருக்கிறார்கள்.

பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்:

என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு யார் கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று பாட்டி சொல்கிறார். எல்லோரும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரோகினி பாட்டிக்கு மேக்கப் போட்டு விடுகிறார். அப்போது பாட்டி, அவருடைய குடும்பத்தை குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஆனால், எப்படியோ ரோகினி சமாளித்து விடுகிறார். பின் அண்ணாமலை வீட்டிற்கு இரண்டு அய்யர்களை கூட்டிட்டு வந்து கோயிலில் சாமிக்கு படைத்த புடவையை கொடுத்து சப்ரைஸ் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் முத்து யாரையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

வீட்டில் முத்து வராததை நினைத்து மீனா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், பாட்டியிடம் எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். ஆனால், முத்து இல்லாமல் மீனா மட்டும் தனியாக நிற்கிறார். உடனே பாட்டி முத்து எங்கே என்று கேட்க வழக்கம்போல் விஜயா திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்குப் பின் பாட்டி, உன் நகை எல்லாம் எங்கே? அதை எடுத்து போடு என்று சொல்கிறார். உடனே பயத்தில் மனோஜ், பாட்டி கவரிங் நகையை கண்டுபிடித்து விடுவாரா? என்று விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு விஜயாவும் சமாளிக்கிறார். பின் பார்வதி தன்னுடைய வீட்டில் இருந்த டிவியை விஜயா கேட்டதற்காக கொண்டு வருகிறார். இதை பார்த்த மனோஜ் சண்டை போடுகிறார். அத்துடன் சீரியலை முடிக்கிறார்கள். இனி வரும் நாட்களில் முத்து எங்கே போனார்? பாட்டி கொடுக்கும் கிப்ட் என்ன? அதை வாங்க போவது யார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full