ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனாவிற்கு ஏற்பட்ட விபத்து - காயத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ.

By Arun · 15/2/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட் செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்று ஒதுக்கி வைக்கிறார். அதோடு முத்து தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான்.

இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது. தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை.

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். ஏற்கனவே அந்த பணக்கார பெண்ணின் அப்பாவிற்கும் அண்ணாமலைக்கு இடையே பல பிரச்சினைகள் இருக்கிறது. ரவி-சுருதி திருமணத்தால் பல கலவரங்கள் வருகிறது. தற்போது சீரியலில் ரவி- ஸ்ருதி இருவரையும் மீனா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்.

View this post on Instagram

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

சீரியல் கதை:

மேலும், வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. காலையில் முதல் இரவு தூங்கும் வரை வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறார். மீனாவும் எதுவும் பேச முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டு செய்து கொண்டிருக்கிறார். உடனே அடுத்த நாள் காலையில் மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சி அடைகிறார்கள். சொல்ல போனால், விஜயாவிற்கு கோபம் தாங்க முடியவில்லை.

நேற்றைய எபிசோட்:

விஜயா என்ன செய்வது என்று புரியாமல் புலம்புகிறார். நேற்று எபிசோடில் மனோஜ் வீட்டில் வேலை பார்க்கிறேன் என்று பொய் சொல்லிக்கொண்டு பார்க்கில் சாப்பிட்டு, விளையாடிக் கொண்டு தூங்குவதை முத்து பார்த்து விடுகிறார். அதை முத்து வீடியோ எடுத்து வீட்டில் போடுகிறார். இதை பார்த்த வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். சமீபத்தில் முத்து-மீனாவிற்கு திருமணம் நடந்தது, அது 300வது எபிசோடாக ஒளிபரப்பானது, அதைக்கண்டு ரசிகர்களும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குள் பெரிய பிரச்சனை வந்துவிடும் என தெரிகிறது. 

கோமதிக்கு நடந்த விபத்து :

இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கோமதி ப்ரியா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற தொடர்களிலும் நடித்து வருகிறார். மலையாள சீரியலில் நடிக்கும் போது காலில் அடிபட்டுள்ளது. அந்த வீடியோவை அவர் வெளியிட்டு படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட முதல் காயம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full