Icuவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வீரம் பட நடிகர் - பிரபலங்கள் பிரார்த்தனை. என்ன ஆனது அவருக்கு ?

By Rajkumar · 8/3/2023

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு தொடர்பான நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் பாலாவின் நண்பரான சுராஜ் பாலகார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாவின் உடல் நிலை குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by 𝗦𝗢𝗢𝗥𝗔𝗝 𝗣𝗔𝗟𝗔𝗞𝗞𝗔𝗥𝗔𝗡 (𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟) (@soorajpalakkaran)

இவரை போல மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் உள்ளிட்டோர் நடிகர் பாலாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். பாலா விரைவில் குணமாக வேண்டும் என்று மலையாள திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும், பாலாவுடன் அவரது தாயாரும் சிறுத்தை சிவாவும் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார்.பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் அம்ருதாவை கடிந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த பாலா கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full