தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வீரம், விவேகம், விசுவாசம் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய பல படங்கள் அஜித்தை வைத்தது தான். இந்நிலையில் இயக்குனர் சிவா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆவதற்கு முன்னரே நடிகராக இருந்துள்ளார். தற்போது அவர் நடிகராக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

இந்த படத்தில் பிரபுதேவா, காயத்ரி ஜெயராம், கௌசல்யா, ரஞ்சித் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஒரு சில காட்சியில் இயக்குனர் சிவா நடித்திருப்பார். தற்போது அவர் நடித்த காட்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் வியந்து போய் சிறுத்தை சிவா வா இது !! என்று கேட்டு வருகிறார்கள்.

தற்போது இயக்குனர் சிவா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Advertisement
Advertisement