தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள்.

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். ஏகே 62 படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்’நெகட்டிவ் ஷேட் கேரக்டரில் நடிக்கிறார்.

Advertisement

ஏகே 61 பற்றிய தகவல்:

நல்லவனும் அவர் தான், கெட்டவனும் அவர் தான் என்று கூறப்படுகிறது. அஜித் ஏகே 61 படத்திற்கு மொத்தம் 60 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ரகுல், தபு என்று கூறப்படுகிறது. நெகட்டிவ் ஷேட் அஜித்தின் போர்ஷன்களைத்தான் ஹைதராபாத்தில் இப்போது படமாக்கி வருகின்றனர். ஹீரோயின்கள் போர்ஷன் மே இரண்டாவது வாரத்திலிருந்து தான் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் இன்னொரு லுக்கில் ஸ்டைலான அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம். இப்படி தொடர்ந்து ஏகே 61 படம் குறித்த அப்டேட் வெளியாகி வருகிறது.

ஏகே 62 பற்றிய தகவல்:

இப்படி ஒரு நிலையில் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இன்று தான் விக்னேஷ் சிவன் இயக்கிய இவர் காத்துவாக்குல 2 காதல் படம் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Advertisement

இயக்குனர் சிவா அளித்த பேட்டி:

இந்நிலையில் ஏகே 63 படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதுஎன்னவென்றால், அஜித்தின் ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் சிவா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அஜித் சார் ரொம்பவே அன்பான மனிதர். அவருடைய நட்பு ,அவருடைய வழிகாட்டுதல் எனக்கு கிடைத்ததே மிகப்பெரிய வரமாக நினைக்கிறேன். அஜித் சார் என்று சொன்னாலே இரண்டு விஷயங்கள் தான் ஞாபகத்தில் வரும். அவர் பயங்கரமான தைரியசாலி.

Advertisement

அஜித் இடம் பிடித்த இரண்டு விஷயங்கள்:

வீரம், விவேகம் படப்பிடிப்பின் போது பல கஷ்டமான காட்சியில் வேணாம் என்று சொன்னாலும் மன வலிமையுடன் நடித்தார். ஒரு முறை அறுவை சிகிச்சை செய்த இடத்திலேயே அடிபட்டது. அஜித் சார் கண்ணில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் வந்தது. இருந்தும் அவர் அந்த காட்சியை நடித்து கொடுத்தார். அந்த அளவிற்கு வேலை மீது டெடிகேட்டிவாக இருக்கும் மனிதர். இன்னொரு விஷயம் நேர்மை. டெக்ஸினியன் முதல் தயாரிப்பாளர் வரை என எல்லோரிடமும் உண்மையாக இருப்பார். அஜித் சாருடன் 4 படங்கள் ஒர்க் பண்ணி இருந்தாலும் மே முதல் தேதியில் எங்க படப்பிடிப்பு இருக்கிற மாதிரி எங்கும் அமையவில்லை.

ஏகே 63 குறித்த தகவல்:

இன்னும் சில தினங்களில் அவருக்கு பிறந்த நாள். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அஜித் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்குகிறார் என்ற பேச்சு ஏற்பட்டது.இதுகுறித்து சிவாவிடம் கேட்ட பொது. அதய் அஜித் சார் அதிகாரபூர்வமாக சொல்வது தான் சரி என்று கூறியிருக்கிறார். அஜித் 63வது படத்தை சிவா இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement