விஸ்வாசம் பட எடிட்டர் மீது படுக்குழு கடும் கோபம்.! காரணம் இது தான்.!

By Rajkumar · 4/1/2019

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளிவருவது உறுதியான நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், ரூபன் படத்திற்கு எடிட் செய்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஸ்வாசம் ட்ரைலர் குறித்து தான் போட்ட ட்வீட்டை கண்டு ட்ரைலர் வெளியாவதற்கு முன்பாகவே லீக் ஆகிவிட்டது என்று சிவா தன்னை தப்பாக எண்ணிக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறியுள்ள அவர், பேட்ட ட்ரைலர் வெளியான பின்னர் தான் விஸ்வாசம் ட்ரைலரை வெளியிட திட்டமிட்டிருந்தோம். நான் விஸ்வாசம் ட்ரைலர் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க ஒரு புகைப்படத்தை மட்டும் போட்டேன்.அது இணையத்தில் வைரலாக ட்ரைலர் லீக் ஆகிவிட்டது என்று பட குழு பயந்துவிட்டார்கள்.

இயக்குனர் சிவாவும் என்மீது கோபம் கொண்டார். அவர் எனக்கு கால் செய்த போது, அணைத்து படங்களுக்கும் நான் இதை தான் செய்வேன். ட்ரைலர் வெளியாவதற்கு முன்பாக ஒரு அப்டேட் கொடுத்தால் அது ட்ரைலர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அதனால் ட்ரைலர் வெளியான பின்பு ரசிகர்களின் வரவேற்ப்பை மட்டும் பாருங்கள் என்று கூறினேன். அதற்கு ஏற்றார் போல ட்ரைலரையும் ஹிட் அடித்து என்று கூறியுள்ளார் ரூபன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full