என்னை Cringeனு சொல்றவங்களுக்கு இதான் பதில் - ஹேட்டர்ஸ்களுக்கு ஷிவாங்கி கொடுத்த செம பதிலடி.

By Arun · 16/12/2022

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசன்களாக கோமாளியாக சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது.

சிவாங்கி திரைப்பயணம்:

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

ஷிவாங்கி ஹேட்டர்ஸ் :

அதே போல சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார். என்னதான் ஷிவாங்கிக்கு பல லட்சம் பாலோவர்கள் இருந்தாலும் அவரை விமர்சிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்களுடன் சில ஹேட்டர்ஸ்களும் உருவாகினர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

Cringe என்று அழைப்பவர்களுக்கு பதில் :

மேலும், இவரை Cringe என்று பல பலர் விமர்சித்து வருவதும் உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் ஷிவாங்கி பெரிதாக கவலைப்படுவது இல்லை. இப்படி ஒரு நிலையில் சிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் 'உங்களை Cringe,Over actingனு சொல்றவங்களுக்கு உங்களின் Reaction என்ன ?' என்று கேள்வி கேட்க, சிரிக்கும் எமோஜியை போட்டு 'இது தான் என் Reaction 'என்று பதில் அளித்துள்ளார் ஷிவாங்கி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full