'அன்னை இல்லம்' விவகாரம்: பிரபுவின் அண்ணனுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு - என்ன தெரியுமா?
சிவாஜி வீடு ஜப்தி தொடர்பாக நீதிமன்றம் போட்டு இருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பை யாராலும் மறக்க முடியாது. இன்றும் அவருடைய பெயர் உலகெங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மேலும், சிவாஜிகணேசன் உடைய பேரனும் நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் சேர்ந்து ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ஈசன் ப்ரொடக்ஷன் 3 கோடி 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனை வாங்கி இருந்தார்கள். இந்த கடனுக்காக ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி தருவதாகவும் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். ஆனால், அதன்படி கடன் தொகையை திருப்பித் தரவே இல்லை.
ஜகஜால கில்லாடி பட விவகாரம்:
இதை அடுத்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. பின் வழக்கை விசாரித்த நீதிபதி, அசல் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகையை ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்கள்.
நீதிபதி உத்தரவு:
அந்த உத்தரவின் படி ஜகஜால கில்லாடி பட உரிமைகள் எல்லாம் விற்று வரக்கூடிய பணத்தில் தங்களின் கடன் தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். ஆனால், படத்தினுடைய வேலைகள் முழுமை அடையாததால் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதை அடுத்து சிவாஜிகணேசன் உடைய வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
https://www.youtube.com/watch?v=qpXSqM-cYlQ
சிவாஜி வீடு ஜப்தி:
பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஈசன் ப்ரொடக்ஷன் தரப்பில் அவகாசம் கொடுத்தும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சிவாஜி மனு வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதை தொடர்ந்து சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு அவர்கள் சிவாஜியின் அன்னை இல்லத்திற்கும் ராம்குமாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அன்னை இல்லம் முழுக்க முழுக்க எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வீட்டினுடைய மதிப்பு 150 கோடி ஆகும்.
நீதிமன்றம் உத்தரவு:
இதை அடுத்து நீதிமன்றத்தில், தன்னுடைய அண்ணன் வாங்கிய கடனை பிரபுவை திருப்பி கட்டிவிட்டு அதற்குப் பிறகு அவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பிரபு, அவர் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கெல்லாம் என்னால் உதவ முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அன்னை இல்லத்திற்கும் தனக்கும் எந்த உரிமையும் இல்லை. இனி மேலும் சொல்ல மாட்டேன் என்று ராம்குமார் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கையும் வேறொரு தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்