கதைக்கு தான் பஞ்சம், படத்தின் தலைப்புக்குமா சோதனை? சிவகார்த்திகேயனின் sk25 படத்திற்கு வந்த எதிர்ப்பு

By subhashini · 24/1/2025

சிவகார்திகேயனின் பராசக்தி படத்திற்கு வந்து இருக்கும் சோதனை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த ராஜ்குமார் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் sk25 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை நடைபெற்றிருந்தது. இதில் ஜெயம் ரவி, அதர்வா, இயக்குனர் சுதா, சிவகார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.

sk25 படம்:

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகப் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் sk25 படத்திற்கு 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமான பராசக்தி படத்தின் டைட்டிலை தான். இன்னும் சில தினங்களில் இந்த படத்தினுடைய டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய டைட்டிலுக்கு தான் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

படத்தின் டைட்டில்:

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'பராசக்தி'
இது வெறும் பெயர் கிடையாது. தமிழ் திரையுலக வரலாற்றை 1952க்கு முன் 1952 க்கு பின் என்று பிரித்து பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களை நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியை தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்துக்கு வைப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது.

படத்தின் டைட்டிலுக்கு வந்த எதிர்ப்பு:

ஒரு யுக கலைஞர் புதல்வராக கலைஞர் கருணாநிதியின் புரட்சிகர வசனங்களை தன்னுடைய உணர்ச்சிகர நடிப்பால் தமிழ் இனம் கொண்டு சேர்த்த தமிழ் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் திரையுலகம் கலையின் கொடையாக உலகுக்கு தந்த படம் தான் பராசக்தி. தமிழ் திரையுலகத்துக்கு இப்போது என்ன ஆனது? என்றே புரியவில்லை. கதை பஞ்சம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துள்ள பல பழைய பாடல்கள் எல்லாம் ரீமேக் என்ற பெயரில் கொல்கிறார்கள். இப்போது பட தலைப்புக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? பராசக்தி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கும் போது அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மீண்டும் பராசக்தி என்ற பெயரில் அந்த படம் வெளியானது.

தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கும் படத்திற்கு பராசக்தி என்று பெயர் சூட்டி இருப்பது நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. வேண்டும் என்று தமிழ் திரை உலக வரலாற்றை சிதைக்கும் நோக்கில் இந்த செயலை செய்கிறார்கள். இந்த செயலுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பராசக்தி என்ற பெயரை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த படத்தினுடைய தயாரிப்பாளர், இயக்குனர், படக்குழுவினரிடம் கேட்டுக்கொள்கிறோம். பராசக்தி என்ற பெயரை மாற்றவில்லை என்றால் நடிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full