சிவாஜி கணேசனின் பேரனுக்கு டும் டும் டும் - காதலியைக் கரம் பிடிக்கும் தர்ஷன் ராம்குமார்

By subhashini · 7/6/2025

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இவருடைய ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் சிவாஜி என்று கூறினார். அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி ஆகிய என்று நான்கு பிள்ளைகள். இவருடைய மகன் பிரபு. தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

சிவாஜி கணேசன் குறித்த தகவல்:

மேலும், மூத்த மகன் ராம்குமாரும் சினிமாவில் இருக்கிறார். ராம்குமாருக்கு துஷ்யந்த் மற்றும் இரட்டைக் குழந்தைகளான தர்ஷன் மற்றும் ரிஷ்யன் ஆகிய மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அதில் துஷ்யந்த் சக்சஸ் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தது அனைவரும் அறிந்தது. இவர் சில படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் அவர் சினிமாவில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். துஷ்யந்த்திற்கு பிறகு பிறந்தவர்கள் தான் இரட்டையர்கள் தர்ஷன், ரிஷியன்.

சிவாஜி குடும்பம்:

இவர்களில் ரிஷியன் வெளிநாட்டில் படிப்பு முடித்துவிட்டு அங்கேயே நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷனுக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருப்பதால் பூனே திரைப்படக் கல்லூரி மற்றும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா இடங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே இவர் மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். படித்து முடித்ததுமே இவர் கோலிவுட்டில் படம் பண்ணுவார் என்று கூறப்படுகிறது.

ராம்குமார் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் தர்ஷனுக்கு திருமணம் நடக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தர்ஷன் டெல்லியில் படித்துக் கொண்டிருக்கும் போது பூஜா என்ற பெண்ணை காதலித்திருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாருமே சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் இவருடைய நிச்சயதார்த்தம் சிம்பிளாக அன்னை இல்லத்திலேயே நடந்தது. இந்த இதில் ராம்குமார், பிரபு குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் மட்டும்தான் கலந்து இருந்தார்கள்.

திருமணம் குறித்த தகவல்:

நாளை சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தான் இவர்கள் திருமணம் நடக்கிறது.
பெண் வீட்டார் விருப்பப்படி வட இந்திய முறைப்படி தான் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் சங்கீத் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது நாளை காலை திருமணமும் மதியமே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் போல திருமணத்தையும் எளிமையாகவே நடத்த இருக்கிறார்கள். இதில் சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறதுஇது .

Tamil Behind Talkies AMP · Quick view
View full