சினிமாவில் 10 ஆண்டை நிறைவு செய்த SK - அவரின் முதல் படத்தின் போது அவர் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரல்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படுத்தி இன்று முன்னனி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்:
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு டான் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:
இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயன் உடைய பழைய ட்விட்டர் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான மெரினா பற்றி தான். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெரினா, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் மெரினா படம் டீவ்ட்:
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தான் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது என்று சொல்லலாம்.இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சிவகார்த்திகேயன் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில், மெரினா படத்தின் ரிலீஸ் தயாராக உள்ளது என்று அவரின் அறிமுக படம் குறித்து பதிவிட்டிருந்தார். நேற்றோடு இவர் சினிமா உலகில் நுழைந்து 10 வருடங்கள் ஆகிறது.
சிவகார்த்திகேயன் ளர்ச்சியை கொண்டாடும் ரசிகர்கள்:
தற்போது இந்த பதிவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார் என்று இவருடைய 10 ஆண்டு கால வளர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் சிவகார்த்திகேயன் டீவ்ட் தான் செம்ம வைரலாகி வருகிறது.