13 வருடங்களுக்கு முன்பு தனுஷ் சாருடன் இங்கு வந்தேன், ஆனால் இப்போ - நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்
தென்னிந்தியாவின் 70 வது பிலிம் பேர் அவார்ட் சவுத் விருது விழா கேரளாவில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறார். பின் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த ஃபிலிம் பேர் விருது தான் என்னுடைய முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் வந்திருக்கிறேன். அவர் தான், சும்மா வா ஜாலியாக போயிட்டு வரலாம் என்று என்னை அழைத்து வந்தார்.
விழாவில் சிவகார்த்திகேயன்:
அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் கொடுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 வருடங்கள் ஆகி இருக்கிறது. அமரன் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது, அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்திற்கு நன்றி. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் நன்றி.
தனுஷ் பற்றி சொன்னது:
இந்த படத்திற்காக நான் கமலஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்து எக்கச்சக்கமான பிலிம் பேர் விருதுகளை பார்த்தேன். அப்போது அமரனுக்காக எனக்கும் கிடைக்கும் என்று நினைத்தேன். இன்று அது கிடைத்து இருக்கிறது. அமரன் மாதிரி ஒரு சீரியசான படத்தில் நடித்த பிறகு ஏன் இப்படி செய்தாய் என்று யாருமே கேட்கவில்லை. எல்லோருமே பாராட்டினார்கள். அதனால் அனைவருக்குமே நன்றி. முக்கியமாக இன்றைய ரசிகர்களுக்கு நன்றி. என்னை அடித்தாலும் மிதித்தாலும் தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டிருப்பது நீங்கள் தான் என்று கூறுகிறார்.
சிவகார்த்திகேயன் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் சேயோன். இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.