எங்க அப்பா வேலை அழுத்தத்தில் தான் இறந்தார்- எமோஷனலாக சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்
தன்னுடைய அப்பா குறித்து எமோஷனலாக நடிகர் சிவகார்த்திகேயன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.
அமரன் படம்:
அதில் சாய்பல்லவி, இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கமலஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோருடன் மேஜர் முகுந்தனின் மனைவி இந்துவும் பங்கேற்று இருந்தார்கள். அதில் சிவகார்த்திகேயன், சில நேரங்களில் நான் நடித்த படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்ததை பார்க்கும்போது நம்மளும் ஹீரோ இல்ல என்று எனக்குத் தோணும்.
https://www.youtube.com/shorts/Kq1jfLxOrqc
படத்தின் ப்ரோமோசன் விழா :
அமரன் படத்தினுடைய முதல் காட்சி நடித்து முடித்ததுமே எனக்கு, நம்ம ஹீரோடா என்ற உணர்வு வந்தது.
காரணம், நான் அணிந்த துணியில் முகுந்த் என்ற பெயர் இருந்தது. நேரடியாகவே இந்திய ராணுவத்தின் இடத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி இருந்தோம். எங்களை சுற்றிலும் ராணுவ வீரர்கள் இருந்தார்கள். ஒரு காட்சி படமாக்கி முடித்ததும் எங்களை சுற்றி இருந்த ராணுவ வீரர்கள் கைதட்டி பாராட்டினார்கள். இது போன்ற நிறைய விஷயங்கள் நடந்தது. இந்த படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்ல மாட்டேன். விருப்பப்பட்டு தான் நான் நடித்தேன்.
https://youtube.com/shorts/Ai73Uc_wnjc?si=yKZ4n18c6r9QsI5n
அப்பா குறித்து சொன்னது:
காரணம், ராணுவ வீரர்கள் காஷ்மீர் தொடங்கி பல இடங்களில் அவர்கள் படும் கஷ்டத்தின் முன் நாம் படும் கஷ்டம் ஒன்றுமே கிடையாது. அதற்கு உண்மையாகத்தான் நாங்கள் உழைத்திருக்கிறோம். சாய்பல்லவி இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார். எனக்கு முகுந்தின் மனைவி, குழந்தையை பார்க்கும்போது என்னுடைய அம்மா, அக்காவை பார்த்தது போலவே இருந்தது. என்னுடைய அப்பாவும் வேலையில் இருக்கும் போது தான் இறந்தார். என்னுடைய அப்பா போருக்கு சென்றோ, சண்டை போட்டோ இறக்கவில்லை.
https://www.youtube.com/shorts/s03u1rTFKz0
முகுந்த் குறித்து சொன்னது:
ஒர்க் பிரஷரில் தான் இறந்து போனார். திடீரென்று ஒரு நாள் உங்க அப்பா இல்லை என்று சொன்னார்கள்.
அதன் பிறகு என் அம்மா, அப்பா, நான் என்று எங்களுடைய வாழ்க்கை மாறியது. என்னுடைய அப்பா இறக்கும்போது அவருக்கு 50 வயது. அதேபோலத்தான் முகுந்த் இறந்தபோது இந்துவுக்கு 30 வயது. எந்த கஷ்டத்தை வேண்டுமானாலும் சமாளிக்கலாம். ஆனால், ஒருவர் இல்லாத கஷ்டத்தை சமாளிக்கவே முடியாது. நான் இந்துவிடம் அதிகம் பேசியது கிடையாது. அவரிடம் இருக்கும் சில குணங்கள் என்னுடைய வாழ்க்கைக்கு எடுத்துச் சென்றது. இந்த படத்தை என்னுடைய அம்மாவுக்கும் அக்காவுக்கும் காண்பிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.