இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் SK, தன் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் - அவரே சொன்ன வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
https://twitter.com/chettyrajubhai/status/1443592060431323148
தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன், தன் முதல் படமான மெரினா படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய சிவகார்த்திகேயன் மெரீனா படத்திற்கு 25 நடித்ததற்கு மொத்தமாக 10000 ரூபாய் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : தன் காதல் மனைவி பெயரை பச்சை குத்திக்கொண்டுள்ள சினேகன். அதுவும் எப்படி பாருங்க (கவிஞர் ஆச்சே)
ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியல் பிரபலம் இர்பான், ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது சிவகார்த்திகேயன் சம்பளம் குறித்து பேசி இருந்தார். அதில், அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நான் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். ஒருமுறை ஒரு பேர்பார்மன்ஸ்சிற்காக கோயம்புத்தூர் சென்றிருந்தோம் அந்த நிகழ்ச்சியை ரம்யா தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
https://twitter.com/chettyrajubhai/status/1421034810890326017
அப்போது நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் பலருக்கும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்தேன். அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாக இருந்தார். எங்களுடைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு எனக்கு 5000 ரூபாய் சம்பளம் கிடைத்தது சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு நான்காயிரம் ரூபாய் கிடைத்தது. அப்போது நான் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தேன். எப்போது நான் கோடிகளில் சம்பளம் வாங்குவேன் என்று. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் அண்ணா கோடியில் சம்பளம் வாங்குகிறார் நான் இன்னமும் அந்த உயரத்தை அடைய வில்லை என்று கூறி இருந்தார் இர்பான் என்பது குறிப்பிடத்தக்கது.