என் அப்பா ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி சீட் வாங்கி தந்தாரு, இன்னைக்கு சீஃப் கெஸ்ட்- சிவகார்த்திகேயன் உருக்கம்

By subhashini · 2/2/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் sk25 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த sk25 Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டைட்டில்:

அதிகப் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘பராசக்தி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமான பராசக்தி படத்தின் டைட்டில் தான். இதே டைட்டிலை விஜய் ஆண்டனி தன் படத்திற்கு பெயர் வைத்து இருக்கிறார். இது தொடர்பான தான் வாதம் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், பராசக்தி டைட்டிலை ஏவிஎம் நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்ததாக அறிவித்து இருக்கிறார் .

பள்ளி விழாவில் சிவா:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய சொந்த ஊரான திருச்சியில் தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது அவர் பள்ளியில் தன்னுடைய தந்தை குறித்து பேசி இருந்தது, இந்த பள்ளியில் எட்டாம் வகுப்புக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதும்போது என்னுடைய அப்பாவோடு வந்திருந்தேன். இங்கு சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம். எனக்கு கணக்கு சரியாக வராது. சுமாராகத்தான் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி இருந்தேன்.

https://www.youtube.com/watch?v=LtgSwONL1Wg

அப்பா குறித்து சொன்னது:

அப்போது அப்பா என்னிடம், நான் யார்கிட்டயும் ரிக்வெஸ்ட் பண்ணி எதையும் கேட்டது இல்லை.
உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூலில் நின்று கேட்டு சீட்டு வாங்கி இருக்கிறேன். தயவு செய்து நல்லா படி என்று சொன்னார். நமக்காக அப்பாவை ஒரு மணி நேரம் நிக்க வைத்துவிட்டோமே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். இப்போ அதே ஸ்கூலில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். அப்பா, பெரிய ஹீரோ, பிரபலம் என்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. இங்கு இருக்கிற ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பகிர்ந்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full