எனக்கு சரியா சம்பளம் கூட இல்லை, ஆனால் என் மீது நம்பிக்கை வைத்தவர் - சிவகார்த்திகேயன் எமோஷனல்

By subhashini · 1/9/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

மேலும், கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்து குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் , விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் ஒரு படம் என்று சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் ஆகியோர் கலந்துகொண்டு படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், என்னுடைய மதராசி படத்திற்காக இங்கு வந்திருக்கிறேன். மதராசி ஒரு சாலிட் மூவி. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு போன்ற பிரபலங்களை வைத்து இயக்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றியதில் பெருமைப்படுகிறேன்.

சிவகார்திகேயன் சொன்னது:

அனிருத் என்னுடைய அன்பு நண்பர், ஹிட் மிஷின். இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் எளிமையான மனிதர். ஆனால், அபாரமான பலமும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர். மதராசிக்கும் உங்கள் அன்பை நீங்கள் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். சினிமாவில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் ரஜினி சார். என்னுடைய மிமிக்ரி பயணங்களுக்கும் என்னுடைய கல்லூரி கல்ச்சுரல்ஸ் நாட்களிலும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய மனைவி ஆர்த்தியும் தான் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். என்னுடைய நண்பர்கள் தான் தொடர்ந்து என்னை மேடை ஏற வைத்தார்கள். என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் எனக்கு சரியான சம்பளம் இல்லாத போதும் அவர் என்னைப் பார்த்துக் கொள்வார் என்று என்னுடைய மனைவிதான் என்னை ஏற்றுக் கொண்டார் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full