நான் இங்கு இருக்க காரணம் இவர்கள் தான் - 'மதராஸி' பட விழாவில் சிவகார்த்திகேயன் எமோஷனல்

By subhashini · 30/8/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.
அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

மேலும், கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்து குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் , விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் ஒரு படம் என்று சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து இருக்கிறார்.

படவிழாவில் சிவா:

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரிக்கு கல்லூரியில் படத்தினுடைய மதராசி படத்தினுடைய பிரமோஷன் நடைபெற்று இருந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் சிவகார்த்திகேயன், மதராசி படம் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=citqJK-_TfQ

படம் பற்றி சொன்னது:

3 வருடங்களுக்குப் பிறகு நான் அனிருத்துடன் மீண்டும் இணைந்து இருக்கிறேன். வாழ்க்கையில் அன்பு ரொம்பவே முக்கியம். அதுபோல இந்த படமும் அன்பை மையமாக கொண்ட கதை. கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் மாணவர்களுடன் ஆக்சன் சீன்களில் உடம்பு வலி ஏற்படும், லவ் காட்சிகள் மனதில் வலிக்க வைக்கும். ஆனால், எனக்கு மனதில் ஏற்படும் வலி ரொம்ப பிடிக்கும். அதனால் தான் லவ் சீன்ஸ் ரொம்ப பிடிக்கும். ஒரு மேஜிக் ரிமோட் கிடைத்தால் கல்லூரி நாட்களுக்கு திரும்பி போவேன் என்று கூறி இருந்தார். அதற்கு பின் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குமே சுவாரசியமாக சிவகார்த்திகேயன் பதிலளித்திருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full