பார்ட் 2 எடுக்கனும்னா என்னோட இந்த படத்த தான் எடுப்பேன், ஆனா - நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

By subhashini · 5/8/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் தற்போது சிவா இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சினிமா திரைப்பயணம், மற்றும் தன்னுடைய வாழ்க்கை அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நிறைய பேர் என் படங்களில் இரண்டாவது பாகம் எடுக்க விருப்பம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். முதலில் எனக்கு இரண்டாவது பாகம் என்றாலே பயம்தான். நல்ல படத்தை இரண்டாவது பாகம் எடுத்து கெடுக்க வேண்டாம் என்று நினைப்பேன்.

சிவகார்த்திகேயன் பேட்டி:

அப்படி எடுக்க வேண்டும் நினைத்தால் என்னுடைய மாவீரன் படத்தை தான் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை கொஞ்சவது மட்டும்தான் என் வேலை. அவர்களை முழு பொறுப்போடு பார்த்துக் கொள்வது என்னுடைய மனைவி தான். ரொம்ப கண்டிப்பான அப்பாவெல்லாம் நான் கிடையாது. ஆரம்பத்தில் என் குழந்தைகள் என்னை பார்த்து கொஞ்சம் பயந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=C4mO-2YBwx8

சினிமா பற்றி சொன்னது:

அதற்குப் பிறகு இவன் எதுவும் பண்ண மாட்டான் என்று அவர்களுக்கே தெரிந்து விட்டது. மேலும், ஆரம்பத்தில் படங்களில் பெண்களை கம்பீரமாக, மரியாதையாக காட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அதைப்பற்றி எல்லாம் யோசித்ததுமே இல்லை. ஆனால், நாம் செய்த தவறுகளை உணர்ந்து தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது, படித்து தெரிந்து கொள்வது, என்னுடைய முந்தைய படங்களில் செய்தவற்றை திருத்திக் கொள்வது என கொஞ்சம் கொஞ்சமாக மாறினேன்.

குடும்பம் பற்றி சொன்னது:

கனா படத்திலிருந்து தான் எனக்கு அந்த எண்ணம் வந்தது. படம் பார்த்தவர்கள் பெண்ணின் கதையை, கனவை, வாழ்வை சொன்னதற்காக குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்கள். அதிலிருந்து பெண்கள் சரியாக பொறுப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என்று நான் பின்பற்ற தொடங்கிவிட்டேன். குழந்தைகள், பெண்கள் நம் படத்தை பார்க்கிறார்கள். அந்த பொறுப்போடு படம் எடுக்கணும் என்ற பொறுப்பும் எனக்கு வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். மேலும், கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். இதை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து குட் நைட் படம் இயக்குனர் விநாயக் குட் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கிறார். இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதன்பின் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full