"சே'னு சொன்னால் ரொம்ப பவர்ஃபுல்லாக இருக்கும், ஏன்னா - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

By subhashini · 30/12/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.

பராசக்தி படம்:

இந்த படத்தை ஜனவரி 10ஆம் தேதியே வெளியிட இருக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியை தயார் செய்து இருக்கிறார்கள். அதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பராசக்தி படம் உருவான விதம் தொடர்பான காணொளி ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=-em6cG8RB5M

ப்ரோமோஷன் நிகழ்ச்சி:

அதில் சிவகார்த்திகேயன், எனக்கு செழியன் என்ற பெயர் ரொம்ப பிடித்திருந்தது. அதை அனைவருமே 'சே'ன்னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லா இருந்தது. இவ்வளவு பவர்ஃபுல்லான எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதில் என்டர்டைன்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்தது. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படித்திருந்தால் டாக்டர் ஆகி இருப்பேன். இல்லைனா பொறியியல் படிப்பில் கோல்டு மெடல் வாங்கி இருப்பேன் என்று வீட்டில் சொன்னேன்.

சிவகார்த்திகேயன் சொன்னது:

இந்த படத்துக்காக தான் நான் முதல்முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். அதுவே சுவாரசியமான தருணமாக இருந்தது. இதற்கு முன்னாடி நான் போட்டது கிடையாது. மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல் என்று சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது ஒரு ஹீரோவாக அதையும் செய்ய நான் ஏன் யோசிக்கணும்.இது நம்முடைய மண், மொழி சார்ந்த படம். பராசக்தி முழுமையான கமர்சியல் படம். அனைத்து வகையான எமோஷன்களும் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் திரையரங்கத்தில் அதிரடியான அனுபவத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full