தளபதி விஜய் இடத்தில் நானா? சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில் - என்ன சொல்லி இருக்காரு பாருங்க
நடிகர் விஜய் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா, பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார்.
அமரன் படம்:
இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார்கள். அப்போது சிவகார்த்திகேயன், இந்த படத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் உண்மையான துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறோம்.
சிவகார்த்திகேயன் பேட்டி:
சினிமாவில் பயன்படுத்தும் துப்பாக்கிகளை விட அந்த துப்பாக்கிகளை கையாள சுலபமாக இருந்தது. அதோடு இந்த படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்துக்காக 80 கிலோ வரை எடையை கூட்டி குறைத்து இருக்கிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்தார். உடனே அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், நீங்கள் நடிகர் விஜய் இடத்தை பிடிக்க போவதாக பலர் சொல்கிறார்கள். அதற்கு உங்களுடைய பதில் என்று கேட்டிருக்கிறார். உடனே சிவகார்த்திகேயன், சினிமாவில் சாதித்த ஒவ்வொருவருக்குமே ஒரு பயணம் இருக்கிறது.
விஜய் குறித்து சொன்னது:
அவர்கள் அந்த இடத்தை பிடிப்பதற்கு தங்களை எவ்வாறெல்லாம் மாற்றிக் கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். சினிமா பின்னணியில் இருந்து வந்தாலுமே கூட தன்னை மாற்றிக் கொண்டு அவருடைய பயணத்தையும், அவருக்கான இடத்தையும் யாராலயும் நிரப்ப முடியாது. சினிமாவை விட்டு அவர் வேறு ஒரு பொறுப்பிற்கு சென்றாலுமே அவரிடம் அப்படியே தான் இருக்கும். அவரிடத்தில் யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று பதில் கூறியிருக்கிறார். ஏற்கனவே பேட்டியில் அடுத்த தளபதி? குறித்து கேட்டதற்கு சிவகார்த்திகேயன், எப்போதுமே ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலக நாயகன், ஒரே சூப்பர் ஸ்டார் தான். அடுத்த என்று வாய்ப்பே கிடையாது. அவர்கள் இடத்திற்கே போகணும், அவர்களாகவே ஆக வேண்டும் என்பது சரி கிடையாது, அது தவறு என்று கூறியிருந்தார்.