சம்பளமே வாங்காமல் பராசக்தி படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - காரணம் இது தானாம், இந்த ட்விஸ்ட் எதிர்பாக்கல

By subhashini · 19/2/2025

பராசக்தி படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருந்தது.

பராசக்தி படம்:

இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘Dawn Pictures and Red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

படம் குறித்த தகவல்:

சமீபத்தில் இந்த படத்திற்கு ‘பராசக்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. விஜய் ஆண்டனியும் தன் படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் இருக்கிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் நேரில் சந்தித்து சமரசம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, ஏவிஎம் நிறுவனம் ‘பராசக்தி’ என்கிற பெயரை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு கொடுத்துவிட்டதாக அறிவித்திருந்தது.

சம்பளம் வாங்காமல் நடிக்க காரணம்:

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காதிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பராசக்தி படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஆனால், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் நடிக்கிறாராம். காரணம், இவர் இந்த படத்தினுடைய லாபத்தில் பங்கு கேட்டிருக்கிறாராம்.

சிவா போட்ட கண்டிஷன்:

இதற்கு முன்பே ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்கள் படத்தின் லாபத்தில் பங்கு கேட்டு நடிப்பது வழக்கமான விஷயம் தான். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்து இருக்கிறார்.
தற்போது இவர் நடிக்கும் பராசக்தி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் அதிலிருந்து பங்கு கேட்பதாக கூறப்படுகிறது. அதோடு அடுத்ததாக நடித்து வரும் படங்களில் இவருடைய சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full