மொதல்ல Unluck Ajithங்கிற உங்க பேர மாத்துங்க - ரசிகர்கள் கேள்விக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்

By Rajkumar · 28/1/2024

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான். இந்தப் படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். பல சிரமங்களுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

ஏலியன் ஜானரில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். வேற்று கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழுகிறது. அது வில்லன் கையில் கிடைக்கிறது. அவன் மைனிங் செய்து பூமியை ஓட்டை போட்டு சில ஆயுதங்களைத் தேட முயற்சிக்கிறார். அப்போது அதில் இருந்து வெளிவந்த நச்சு வாயால் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இது அந்தக் கல் வந்த கிரகத்தில் வாழும் உயிரினமான ஏலியனுக்கு தெரிகிறது. பின் ஏலியன், பூமி முக்கியம்.

அதைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. அந்த ஏலியன் புழு பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத ஹீரோ சிவகார்த்திகேயனிடம் செல்கிறது. பிறகு அந்த மைனிங் ப்ராஜெக்ட் சென்னைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் இருவரும் இணைந்து சென்னையை காப்பாற்றினார்களா? அந்த வில்லனை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களா? பூமிக்கு வந்த அந்த கல்லால் மக்களுக்கு நல்லது நடக்கிறதா? என்பதே படத்தின் மீதி கதை.

https://www.youtube.com/watch?v=Dg9_y3GYJTY

இந்நிலையில் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இப்படத்தின் அடுத்த பாகமான ‘அயலான் 2’ உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து படக்குழு இன்ஸ்டா லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது Unlucky அஜித் என்ற இன்ஸ்டா பக்கத்திலிருந்து ரசிகர் ஒருவர் கமன்ட் செய்து இருந்தார்.

அயலான் பட Alienக்கு கூட ஆள் இருக்கு.. எனக்கு இல்ல.. நான் சிங்கிளா இருக்கேன் என்று கூற, அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், முதல்ல உன் யூசர் நேம் மாத்துப்பா என்று கூற அதற்கு இசையமைப்பாளர் ரகுமான் சிரித்துக்கொண்டே ஆமா என்று கூறுவது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அயலான் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full