18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக - மீண்டும் அப்பாவான சிவகார்திகேயன்

By Rajkumar · 12/7/2021

தனக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருப்பதை பற்றி மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். மேலும், கனா படத்தில் இவர் பாடிய 'வாயாடி பெத்தப் புள்ள' பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று தனது மகன் தனது கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full