அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம் - மீண்டும் அப்பாவான ஆனந்தத்தில் SK போட்ட பதிவு.

By Dhilip Kumar · 3/6/2024

நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் அப்பாவாக இருக்கும் தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அஜித்

மேலும், கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் இவர் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருக்கிறார்கள். ஏலியன் ஜனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

அமரன் படம்:

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சிவா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் கறி விருந்து அளித்திருந்தார். அந்த வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவருக்குமே ஃபாசில் நிறுவன வாட்சை சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் அப்பாவான சிவா:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து குடும்ப உறவினர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருந்தார்.

சிவகார்த்திகேயன் பதிவு :

அதில் ஆர்த்தியின் வயிறு பெரிதாக கர்ப்பமாக இருந்தது உறுதியானது. இதனால் இன்னும் சில மாதங்களில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக குழந்தை பிறக்க போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மகன் பிறந்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன் ' எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full