எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இது தான் முதல் தடவ - அயலான் பட விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.

By subhashini · 7/10/2023

எம்ஜிஆருக்கு அடுத்து நான் தான் இதை செய்திருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார்.

மாவீரன் படம்:

மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்து இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்தார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான்.

https://www.youtube.com/watch?v=PgGoIb8fuic

அயலான் படம்:

இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. மேலும் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், தீபாவளிக்கு அயலான் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருந்தோம்.

நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சொன்னது:

ஆனால், படத்தில் இன்னும் சின்ன சின்ன வேலை இருப்பதால் பொங்கலுக்கு தள்ளி வைத்திருக்கிறோம். இன்று நேற்று நாளை படத்தை பார்த்ததும் இயக்குனருக்கு இது தொடர்பாக போன் செய்து பேசினேன். அப்போது இயக்குனர் என்னை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். அப்போதே இவருடன் சேர்ந்து படம் செய்யணும் என்று முடிவு செய்தேன். ரவிக்குமார் மேல் இருந்த நம்பிக்கையில் தான் நான் இந்த படத்தை செய்ய ஒற்றுக் கொண்டேன். 95 நாட்களிலேயே இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டார். மேலும், இது போன்ற ஏலியன் வைத்து முன்னாடி எம்.ஜி.ஆர். ஒரு படம் செய்திருந்தார்.

அயலான் படம் குறித்து சொன்னது:

அதற்கு பிறகு இப்போது நாங்கள் தான் முயற்சி செய்து இருக்கிறோம். தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு கான்செப்டில் படம் வருகிறது என்று முத்துராஜ் சாரும் சொல்லி இருந்தார். இதனால் உடனே யூடியுப்கள் எம்ஜிஆருக்கு அடுத்தது நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொன்னார் என்றெல்லாம் போட்டு விடாதீர்கள். எம்ஜிஆர் செய்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் செய்திருக்கிறோம் என்று தான் சொல்ல வருகிறேன். படத்தில் இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை சொல்லும் விதமாக இந்த படம் இருக்காது. கட்டாயமாக எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full