சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சனைகள் - மீண்டும் மேடையில் கலங்கிய சிவகார்த்திகேயன்

By Rajkumar · 12/3/2024

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை அடுத்து இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிரின்ஸ். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

இதனை அடுத்து கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அயலான் படமும் கலையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

https://twitter.com/kumudamdigi/status/1767135517416771850

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார்.ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்க்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெயரில் 1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் அமரன் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசரை பகிர்ந்த சிவகார்த்திகேயன் 'மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

https://twitter.com/VNR_SKFC/status/1766872746187739442

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசி இருந்தார் சிவகார்த்திகேயன். அப்போது பேசிய அவர். எனது சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சனைகள், வலிகள் உள்ளது. அதனைப் பகிர்ந்துகொள்ள எனக்கு அப்பாவோ, அண்ணனோ இல்லை. ஆனால் அப்படியான காலங்களில் எனது ரசிகர்களான நீங்க இருந்தீங்க. இன்னுமும் இருப்பீங்க' என்று உருக்கமுடன் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full