மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது - விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

By subhashini · 2/12/2025

சென்னையில் நடந்த fanly பொழுதுபோக்கு செயலின் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் நடிக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால் நான் இயக்குனர்களை எல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் சொல்வதைக் கேட்டு நான் நடிக்கிறேன்.

அதனால்தான் எனக்கு மூளை கம்மியாக இருப்பது நல்லது தான். நான் எப்பவுமே என்னுடைய ரசிகர்களை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று தான் சொல்லுவேன். காரணம், அவர்களை ஒரு ஃபேமிலியாக பார்க்கிறேன். என்னுடைய ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிட கூடாது. வேற ஏதாவது அவங்க மைண்டுக்குள் திணிச்சிட கூடாது என்பதை நான் மைண்டில் எப்பவும் வைத்திருப்பேன். எனக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்றால், என்னை வர்ஷிப் பண்ணுகிற ரசிகர்கள் வேண்டாம். அவங்க வர்ஷிப் பண்ண வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான்.

விழாவில் சிவகார்த்திகேயன்:

என் கூட ஃப்ரெண்ட்லியா பேசுற ஒரு அண்ணன், தம்பி மாதிரி பழகுற ரசிகர்கள் தான் எனக்கு இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன். எங்களுக்கு இன்ஃபர்மேஷன் அத்தண்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறேன். இந்த ஆப்பில் எனக்கு அனிருத் வரணும்னு ரொம்ப ஆசை. அவருக்கு இது ரொம்ப பர்ஃபெக்டாக இருக்கும். உலகம் முழுவதும் ஒன்லி அனிருத் தொட மியூசிக் பிடித்தவங்க மட்டும் நிறைய பேர் இருக்காங்க. தனியா ஒரு இடம் இருக்கணும்னு கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. இது ரொம்ப பாசிட்டிவ்வான ஒரு சூழலை கிரியேட் பண்ணட்டும் என்று கூறியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=0hWzgc3OWhc

சிவகார்த்திகேயன் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் செய்து வருகிறது.

பராசக்தி படம்:

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘Dawn Pictures மற்றும் Red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full