அந்த படத்தில் நடித்தது தான் மிகப்பெரிய தவறு. இறுதியாக போட்டுடைத்த சிவகார்த்திகேயன்.

By Rajkumar · 13/12/2019

தமிழ் சினிமா துறையில் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது உள்ள நடிகர்களில் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஹீரோ என்று பேர் வாங்கியவர். ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய துறு துறுப்பான நடிப்பும், நகைச்சுவை கலந்த பேசும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து உள்ளது. மேலும் ,சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் "நம்ம வீட்டு பிள்ளை". மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது.

சமீப காலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வியில் இருந்தது. மேலும், இதை முறியடிக்கும் வகையில் இந்த படம் அமைந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதனால் தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் லிஸ்டில் சேர்ந்தார் சிவகார்த்திகேயன் இது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் படங்களையும் தயாரித்து வந்தார் இறுதியாக இவரது தயாரிப்பில் வெளிவந்த கானா மற்றும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல சாதனைகளை படைத்தது.

இதையும் பாருங்க : இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த தலை வாசல் விஜய்யின் மகள். இவருக்கு இவ்வளவு பெரிய மகளா ?

இதனால் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் தனது திரை வாழ்க்கையில் நடித்த மோசமான திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது தமிழில் சிவா மனசுல சக்தி ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தான்.

இந்தப் படத்தில் நடித்தது தான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் இயக்குனர் ராஜேஷ் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மிஸ்டர் லோக்கல் கதையை அவர் என்னிடம் கூறும்போது அந்த கதையை கேட்டுவிட்டு நான் வேறு கதை வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த சில பிரச்சனைகளால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், ஒப்புக்கொண்டதால் படத்தில் நடித்துக் கொடுத்தால் போதும் என்று நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full