தனது மகள் மற்றும் மனைவியுடன் மறைந்த தனது தந்தை - பிறந்தநாள் பரிசை பார்த்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்.

By Rajkumar · 18/2/2021

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் டான் படக்குழு கொடுத்த நெகிழ்ச்சியான பரிசை பார்த்து சிவகார்த்திகேயன் நெகிழிந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.

இதையும் பாருங்க : உடைந்த விரல்கள், முகத்தில் காயம் - விபத்தில் சிக்கிய மாளவிகா - அவரே பகிர்ந்த புகைப்படம்.

இப்படி ஒரு நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் பல பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படக் குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் தனது தந்தை இருப்பது போல புகைப்படத்தை பரிசாக வழங்கினார்கள். இதை பார்த்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அடைந்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர், அயலான், டான் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்துள்ள 'அயலான்' படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியானது. இசைப்புயல் ஏ ஆர் ரஹமான் இசையமைத்துள்ள இந்த பாடல் யூடுயூபில் சில மணி நேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full