நீ என்ன படிக்க விரும்பரன்னு கேட்டார், நான் இந்த படிப்பை சொன்னதும் உடனே அந்த காலேஜ்ல அட்மிஷன் வாங்கி கொடுத்தார்

By subhashini · 20/1/2022

குடும்ப சூழ்நிலைக்காக படிப்பை பாதியில் விட்டு பஞ்சர் ஒட்டி வந்த மாணவிக்கு சிவகார்த்திகேயன் உதவி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படி ஒரு நிலையில் படிக்க படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் பஞ்சர் ஒட்டி வந்த மாணவிக்கு சிவகார்த்திகேயன் சொந்த செலவில் படிக்க வைத்து உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

படிக்க முடியாமல் பஞ்சர் ஒட்டிய மாணவி:

அந்த மாணவியின் பெயர் தேவசங்கரி. இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்து படித்திருக்கிறார். இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு நர்சிங் கோர்ஸ் படிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அவருடைய குடும்பத்தின் வறுமை காரணமாக படிக்க முடியவில்லை. இதனையடுத்து இந்த மாணவி குடும்ப சூழ்நிலைக்காக பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். பின் பஞ்சர் ஒட்டும் மாணவியை சமீபத்தில் ஊடகமொன்று பேட்டி எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தது.

உதவிக்கரம் நீட்டிய சிவா:

இந்த செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரவியிருந்தது. இந்த நிலையில் இந்த செய்தியை பார்த்த சிவகார்த்திகேயன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு நீ விரும்பும் படிப்பை நான் படிக்க வைக்கிறேன் என்ன படிக்க விரும்புகிறாய்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த மாணவி தேவசங்கரி நர்சிங் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன் படிக்க வையுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் நாகப்பட்டினத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் தேவசங்கரிக்கு அட்மிஷன் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

மாணவிக்கு கல்லூரியில் சீட் வாங்கி தந்த சிவா:

அதோடு அந்த மாணவி படிக்க தேவையான அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து இது குறித்து அந்த மாணவி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய சூழ்நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் அவர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் அட்மிஷன் வாங்கி கொடுத்து அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். அது மட்டுமில்லாமல் பொங்கல் தினத்தில் என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் புது துணி வாங்கி தந்து இருக்கிறார்.

பேட்டி அளித்த மாணவி:

அந்த துணியை அணிந்து தான் நாங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினோம். என்னைப் படிக்க வைத்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ரொம்ப நன்றி. நான் படித்து என்னைப் போலவே கஷ்டப்படுவார்களுக்கு உதவி செய்வேன் என்று சந்தோசத்தில் அந்த மாணவி கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இதை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full