இயக்குனர் அட்லி இடம் உதவியாளராக இருந்தவர் போஸ்கோ பிரபு. போஸ்கோ பிரபுவின் கதையைத் தான் இயக்குநர் மித்ரன் திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டார் என்று போஸ்கோ அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்து உள்ளார். ஹீரோ படம் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து வெளியாகும் வரை பல பிரச்சனைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி தான் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், இப்படம் வெளியானதை தொடர்ந்து ஹீரோ படம் கதை திருட்டு தான் என்று உண்மையானது. கதை திருடியது உண்மைதான் என்று இயக்குனரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவருமான கே. பாக்யராஜ் கூறியுள்ளார். இது சம்மந்தமாக சில தினங்களுக்கு முன்பு பாக்யராஜ் அவர்கள் போஸ்கோவுக்கு கடிதத்தில இது குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டீசர் மற்றும் விளம்பரங்களை பார்த்துள்ளேன்.

Advertisement

அந்த படத்தின் கதை எழுத்தாளர் சங்கத்தில் 2017 ஆம் ஆண்டு பதிவு செய்து வைத்துள்ள கதையை திருடி மித்திரன் அவர்கள் இயக்கி உள்ளார் என்றும், நியாயத்தை வழங்குங்கள் என்று நீங்கள்(போஸ்கோ ) 2019ஆம் ஆண்டு புகார் எழுதி இருந்தீர்கள். அதன்படி நான் கதை சுருக்கத்தை மட்டும் தங்களிடம் கேட்டு வாங்கிக்கொண்டும், டைரக்டர் மித்ரன் இடம் ஹீரோ படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதி தர சொல்லி இருந்தோம். அதை வாங்கி இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பார்த்தோம். மேலும், 18 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களிடம் உங்கள் தரப்பு வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. சினிமா துறையில் பல படங்களை இயக்கிய திரைக்கதை ஆசிரியர், இயக்குனர்கள் என திறமை வாய்ந்த அனுபவசாலிகள் அனைவரும் படித்த பின் தான் தங்கள் கதையும் மித்திரன் கதையும் ஒன்று தான் என எங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இதனால் இயக்குனர் மித்திரனை அலுவலகத்திற்கு வர சொல்லி இருந்தோம். மேலும், நீதிமன்றம் கொடுத்த அறிவுரையின் படி இரண்டு கதைகளையும் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒற்றுமைகள் இருப்பதாக மொத்த உறுப்பினர்களும் கருதுகிறோம். இது குறித்து நாங்கள் இயக்குனர் மித்திரன் இடம் பேசினோம். ஆனால், அவர் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு 18 பேரும் அவரிடம் தெளிவாக கூறினார்கள். ஆனாலும், அவர்களுடைய விளக்கத்தை கூட மித்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கடைசி வரை இரண்டு கதையும் ஒன்று தான் என்று ஆணித்தரமாக கூறினோம்.

Advertisement

Advertisement

ஹீரோ படத்தின் கதை தங்களுடைய கதை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டதால் இதற்கான இழப்பீட்டு தொகையை தர வேண்டும் என்று மித்திரன் இடம் கூறியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் நிறைய பிரபலமான ஹீரோக்களின் படங்கள் கூட இந்த மாதிரி பிரச்சினையை சந்தித்து உள்ளது. நாங்கள் இது சம்பந்தமாக மித்ரனுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், அவர் ஒரு மாதம் ஆகியும் அதற்கான பதிலை அவர் அளிக்கவில்லை. மேலும், இயக்குனர் மித்ரன் அவர்கள் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்க கேவியட் வாங்கி உள்ளார்.

நமது சங்கத்தின் 18 பேரும் இரண்டு கதையும் ஒப்பிட்டு ஒன்று என்று உறுதி செய்யப்பட்டு சாட்சி கடிதத்தை உங்களுக்கு தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க எங்களுடைய வாழ்த்துக்கள் என்று பாக்கியராஜ்அந்த கடிதத்தில் கூறி இருக்கிறார். . ஆகவே, ஹீரோ படத்தின் கதை திருட்டு உண்மை என்பது உறுதியானது. இதனால் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தீர்ப்பை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Advertisement