அது ஸ்க்ரிப்ட்ல இல்லாத வசனம் தான் - தன் படத்தில் தந்தை குறித்து அறியாமல் பேசியுள்ள சிவகார்த்திகேயன் -வீடியோ இதோ (எவ்ளோ வலி இந்த மனசனுக்குள்ள )

By Rajkumar · 27/3/2021

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் டான் படக்குழு கொடுத்த நெகிழ்ச்சியான பரிசை பார்த்து சிவகார்த்திகேயன் நெகிழிந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=OVi6bd2S7Ec&feature=youtu.be

சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், தான் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் அப்பா குறித்து பேசிய வசனம் குறித்து பேசியுள்ளார். அதில், அதாவது நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தனக்கு அப்பா இல்லை என்று பேசிய வசனம் இயல்பாக வந்த வசனம்தான் என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன் என்னுடைய அப்பா இறந்து 18 வருடங்கள் ஆகிறது இன்றும் அவரை நினைக்காமல் வாழ்க்கை நகர்வது கிடையாது என்று உருக்கமாக கூறியுள்ளார்

https://twitter.com/visvickey/status/1374968192435593218

தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர், அயலான், டான் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 17 தான் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்துள்ள 'அயலான்' படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியானது. இசைப்புயல் ஏ ஆர் ரஹமான் இசையமைத்துள்ள இந்த பாடல் யூடுயூபில் சில மணி நேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full