வாயை கொடுத்து மாட்டியதால் வெளுத்து வாங்கிய தனுஷ் ரசிகர்கள் - மீண்டும் தனுஷ் குறித்து பேசிய SK

By subhashini · 25/8/2024

விருது விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘கொட்டுக்காளி’. இந்த படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கூழாங்கல்’ என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், நான் கதைக்காக பண்ணுவதை தாண்டி இப்படி ஒருத்தரை, வினோத் ராஜ் என்பவரை செலப்ரேட் பண்ணுவதற்காக இந்த படத்தை பண்ணுகிறேன். இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதற்கான ஒரே காரணம் வினோத் ராஜ் தான். இந்த படத்தில் என்ன இன்வெஸ்ட் பண்ணி இருக்கேனோ அது வெற்றி அடைந்து லாபம் வந்தால் அவருடைய அடுத்த படத்திற்கு அதை கொடுப்பேன்.

விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது:

இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் ராஜ் மாதிரி இருக்கும் நபர்களை தேடி கண்டுபிடித்து இரண்டு பேருக்கு அட்வான்ஸ் கொடுப்பேன் என்றார். இந்த வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்னால் இந்த சின்ன கிரெடிடாக பார்க்கிறேன். அதுக்காக நான் தான் எல்லாரையும் கண்டுபிடித்து வாழ்க்கை கொடுத்தேன். நான் தான் எல்லாரையும் உருவாக்கினேன் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா, என்னை அப்படி சொல்லி சொல்லி பழகி விட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் கிடையாது. கொட்டுக்காளி வெற்றியடைந்தால், இந்த மாதிரி முயற்சிகள் மீண்டும் தொடரும் என்று பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=kTqeAK5Jmxk

தனுஷ் ரசிகர்கள் கொந்தளிப்பு:

இதை அடுத்து சிவகார்த்திகேயனின் பேச்சைக் கேட்ட தனுஷின் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அனிருத், சென்றாயன், ரோபோ சங்கர், எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் தனுஷை புகழ்ந்து பேசுவதைப் போல வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்கள். மேலும், தனுஷ் ஒருபோதும், நான் தான் உருவாக்கினேன் என்று யாரையும், எங்கும் சொன்னதில்லை என்று , சிவகார்த்திகேயனுக்கு எதிராக திட்டி கமெண்ட்களை பதிவிட்டு இருந்தார்கள்.

சிவா அளித்த பேட்டி :


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன், நான் ஒரு படத்தால் மட்டும் இந்த இடத்திற்கு வரவில்லை. என்னை பல நிகழ்ச்சிகள், எபிசோடுகள், டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் நான் அறியப்பட்டேன். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்னை பார்த்து அவர்கள் வீட்டு பையனாக பார்க்க ஆரம்பித்தார்கள். விஜய் அவார்ட்ஸ் மூலம் தான் என்னை மக்கள் மத்தியில் நிறைய பிரபலப்படுத்தியது.

வைரலாகும் வீடியோ :

அதற்குப் பிறகு பாண்டியராஜன் சார், தனுஷ் சார் போன்ற பல இயக்குனர்கள் எனக்கு படங்கள் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கு பிறகு தான் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தது. தற்போது கமல் சார், ஏ ஆர் முருகதாஸ் போன்ற பல பேருடைய படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோவை தான் தனுஷ் ரசிகர் வைரலாகி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full