"எமனே தவறு செய்தாலும் தட்டிகேட்பேன்" வெளியானது மாவீரன் படத்தின் ட்ரைலர்.

By Manikandan · 3/7/2023

எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:

மேலும், டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த பிரின்ஸ் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது.

மாவீரன் படம்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைகிறார். இந்நிலையில் தான் படத்தின் ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் ரெட் ஜெய்ன்ஸ்ட் மூவீஸ் நிறுவனம் தான் இந்த படத்தை வெளியிடம் என்பதனை அதிகார பூர்வமாக அந்த நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. மேலும் இதனை தொடர்ந்து அனிருத் பாடிய சீனு, சீனு என்ற பாடலும், சிவகார்த்திகேயன் பாடிய வண்ணாரப்பேட்டை பாடலும் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியிருந்தது.

https://youtu.be/EcNACt-LOi0

இந்நிலையில் தான் மாவீரரின் படத்தின் அடுத்த அப்டேட்டடாக ட்ரைலரானது வெளியாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர். இதில் பல காட்சிகள் ரசிகர்களுக்கு புதிர் போடும்படியாக இருப்பதினால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ட்ரைலரின் வரும் எமனே தவறு செய்தலும் தட்டிகேட்பேன் என்ற வசனம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full