இன்று ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன் அது அண்ணன் தான் காரணம் - சிவகார்த்திகேயன் நெகிழ வைத்த மாற்று திறனாளியின் பதிவு.

By Arun · 2/3/2022

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

https://twitter.com/Pro_Premkumar/status/1498528707082059776

இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த டாக்டர் படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கமல் தயாரிப்பில் சிவா நடிக்கும் படம்:

அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படி இவர் சினிமா துறையில் உச்சத்தில் உயர்ந்து கொண்டு சென்றாலும் இன்னும் பழைய நினைவுகளை மறக்காமல், மாறாமல் இருக்கிறார். விஜய் டிவியில் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அங்கிருக்கும் நபர்களுடன் இன்னும் பேசிக்கொண்டும், எப்பவுமே போல் அதே குணத்துடன் திகழ்கிறார். இதைப் பற்றி பலரும் பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள்.

சிவா செய்த சமூக சேவைகள்:

தற்போது சிவா பெரிய உயரத்தில் இருந்தும் ரொம்ப சிம்பிளிசிட்டியாக இருக்கிறார். இவர் தன்னுடைய கடந்து வந்த பாதையை என்றும் மறவாதவர். மேலும், இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட பஞ்சர் கடையில் வேலை செய்த மாணவிக்கு கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்து அவருடைய படிப்பு செலவு முழுவதையும் சிவா ஏற்றிருக்கிறார். அதேபோல் மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தான் எழுதும் பாடல்கள் மூலம் வரும் சம்பளத்தை கொடுத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் மறைமுகமாக சிவகார்த்திகேயன் பல உதவிகளை செய்து வருகிறார்.

வைரலாகும் சிவகார்த்திகேயன் வீடியோ:

இந்நிலையில் சிவாகார்த்திகேயன் குறித்து பியானோ பிரேம் குமார் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த ரசிகர்களின் சந்திப்பில் சிவகார்த்திகேயனை சந்திக்க பிரேம்குமார் வந்திருந்தார். பிரேம்குமார் மாற்றுதிறனாளி ஆவார். அவரைப்பார்த்த உடன் சிவகார்த்திகேயன் கை கொடுத்து கூட்டிட்டு வந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பிரேம்குமார் டுவிட்டரில் கூறியிருப்பது, சிவகார்த்திகேயன் அவர்களை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=yQ6oeyZ3-XE

பிரேம்குமார் பதிவிட்ட பதிவு:

அன்றும் இன்றும் என்றும் அதே அன்பு, அதே பாசம். என் கையை பிடித்து தூக்கி விட்டார். இது இந்த இடத்தில் மட்டும் இல்லை என் வாழ்வில் கூட. இன்று ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன் அது அண்ணன் அவர்களின் வார்த்தைகள் எனக்கு அளித்த ஊக்கம் தான். என் வாழ்வின் தூண்டுகோலாக இருக்கும் அண்ணன் மற்றும் இந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வழியில் பணியாற்றுவேன். இந்த அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full