சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்ததா? வசூல் விவரம் இதோ

By subhashini · 6/9/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதராஸி படம்:

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் பெரியளவு வசூலிக்கவில்லை. முதல் நாளில் இந்த படம் உலக அளவில் 18. 52 கோடி மட்டும் தான் வசூலிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 9.5 கோடி வசூல் செய்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1.4 கோடி, கேரளாவில் 85 லட்சம், கர்நாடகாவில் 57 லட்சம், மற்ற மாநிலங்களில் 1.5 கோடி மற்றும் வெளிநாடுகளில் 4.7 கோடி வசூல் செய்திருக்கிறது. அமரன் படத்துடன் ஒப்பிடும்போது இந்த படம் மிக குறைவான வசூலை தான் செய்திருக்கிறது.

படத்தின் வசூல்:

அமரன் படம் முதல் நாளிலேயே உலக அளவில் 42.3 கோடி வசூல் செய்தது. அதோடு சிவகார்த்திகேயன் கேரியரிலேயே முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை அமரன் படைத்தது. ஆனால், மதராசி அந்த படத்தில் பாதி கூட வசூல் செய்யவில்லை. இருந்தாலும், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தினுடைய வசூல் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
படத்தில் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் வட இந்தியாவில் இருந்து துப்பாக்கி கலாச்சாரத்தை நடத்துகிறார்கள்.

படத்தின் கதை:

அந்த வகையில் ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசரும் முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை மீறி துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். சென்னையில் ஒரு தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருக்கிறார்கள். அதோடு காவல்துறையினுடைய அதிரடி படையிலேயே சமூக விரோதிகளுடைய ஆதரவாளர்களுமே இருக்கிறார்கள். இந்த சதி செயல்களால் அவர்களுடைய திட்டமும் நிறைவேறுகிறது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் காதல் தோல்வியால் தற்கொலைக்கும் முயற்சி செய்கிறார். பின் அவரை வைத்து தான் இந்த துப்பாக்கிகளை அழிக்க போலீஸ் அதிகாரி முடிவெடுக்கிறார். அதற்குப்பின் அந்த தொழிற்சாலைக்கு சாதாரண தொழிலாளியாக சிவகார்த்திகேயனும் செல்கிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்ட உண்மை போலீசுக்கு தெரிய வருகிறது. தொழிற்சாலைக்கு செல்லும் சிவகார்த்திகேயன் வில்லன்களை கண்டுபிடித்துமே அவர்களை கொலை செய்ய தயங்குகிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? பதுக்கி வைத்த துப்பாக்கிகளை சிவகார்த்திகேயன் அழித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full