கோடி கணக்கில் சம்பாதிக்கும் சிவகார்த்திகேயன் வாடகை வீட்டிற்கு போனாரா? காரணம் இது தான்

By subhashini · 19/7/2025

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் பின்னணியும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சென்னை பனையூரில் தான் தன்னுடைய குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

வாடகை போன சிவா:

தற்போது அவர் அங்கிருந்து சென்னை ஈசிஆரிலுள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டுக்கு குடி பெயர்ந்திருக்கிறார். சொந்த வீட்டிலிருந்து சிவகார்த்திகேயன் வாடகை வீட்டுக்கு சென்றதற்கு காரணம், பனையூரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டை இடித்துவிட்டு மாடர்ன் பங்களா ஒன்றை கட்ட திட்டமிட்டு இருக்கிறார். அதனால் தான் இவர்ஈசிஆரில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சிவா பனையூரில் பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக பங்களா கட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

மேலும், கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘Dawn Pictures and red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்புகளுமே மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கும் படங்கள்:

இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து குட் நைட் படம் இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதன்பின் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full