பூர்விக கிராமத்தில் அழகிய வீடு கட்டிய சிவகார்த்திகேயன்- வைரலாகும் புகைப்படங்கள் இதோ.

By subhashini · 15/4/2022

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய பூர்வீக கிராமத்தில் அழகான புது வீடு கட்டி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். முதலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் டான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

சிவா நடிப்பில் வெளிவர உள்ள படங்கள்:

டாக்டர் படத்தின் கதாநாயகி பிரியாங்கா அருள்மோகன் தான் இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார் தான் தற்போது அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிவா நடிப்பில் உருவாகும் படங்கள்:

மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாகவும், குழந்தைகளை கவரும் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.

சிவா நடிக்கும் தெலுங்கு படம்:

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை, சத்யராஜ் நடிக்கின்றனர்.

தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் பேரன்:

மேலும், இந்த படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய பூர்விக கிராமமான திருவீழிமிழலையில் அழகான புது வீடு ஒன்றை கட்டியுள்ளார். திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர். இந்தியாவோட தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் ஆன சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள்.

சொந்த ஊரில் வீடு கட்டிய சிவகார்த்திகேயன்:

திருவீழிமிழலை சகோதரர்கள்’ என பேர் வாங்கிய கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகிய இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள். சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் அவர்கள் திருவீழிமிழலைக்கு சென்றிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த நிலையில் இவர் தன்னுடைய சொந்த ஊரிலேயே புது வீடு ஒன்று கட்டி கிரகபிரவேசம் நடத்தியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full