நான் அது ஆகணும் இது ஆகணும் இல்ல, என் நோக்கம் - சர்ச்சைகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பளீச் பதில்

By subhashini · 6/9/2025

விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.
மேலும், கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இதை அடுத்து குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கிறார். இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் , விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் ஒரு படம் என்று சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பேட்டி:

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவரிடம் விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அஜித் கார் பந்தயங்கள் என்று பிஸியாக இருக்கிறார். மக்கள் தற்போது உங்களைத்தான் அந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள்.

விஜய்-அஜித் பற்றி சொன்னது:

இதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் மக்கள் தான் இதை முடிவு செய்ய வேண்டும். நான் உழைக்க தயார். ரஜினி, கமல், விஜய், அஜித் 4 பேருக்குமே தனித்துவம் இருக்கிறது. நான் அது ஆகவேண்டும் இது ஆக வேண்டும் என்று யோசித்ததே கிடையாது. மக்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full