சினிமா துறையில் பிரச்சனை செய்பவர்கள் யார்? நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில்

By subhashini · 27/2/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். இன்று வெளியாகிருக்கும் தாய் கிழவி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்க்க பட குழுவினர் திரையரங்கிற்கு சென்றிருக்கிறார்கள். பின் படத்தை பார்த்த பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

தாய் கிழவி படம்:

அப்போது திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அவர்கள் யார் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன், அது யாருன்னு எல்லோரும் கேட்கிறீர்கள். ஆனால், அது யாருன்னு சொன்னால் youtube சேனலுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியூஸ் வரும். இன்னொருத்தரை குறை சொல்லணும்னு நான் அதை சொல்வது கிடையாது. இந்த மாதிரியான விஷயங்களை தாண்டி தான் வருகிறோம் என்பதைத்தான் சொல்கிறோம்.

https://www.youtube.com/watch?v=pdtVZ8VpTk8

சிவகார்த்திகேயன் பேட்டி:

ராதிகா மேடம் கிட்டத்தட்ட 48 வருடமாக திரைத்துறையில் இருக்கிறார்கள். அவர்களும் இதை அனுபவித்து இருக்கிறார்கள். கம்பளைண்ட் பண்றதுக்காக அதையெல்லாம் நான் சொல்லவில்லை. இந்த மாதிரியான சூழலை கடந்து தான் படங்களை செய்கிறோம் என்று சொல்கிறேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார். படத்தில் ராதிகா அவர்கள் கருமாத்தூர் கிராமத்தில் பவுனுதாயாக வசித்து வருகிறார். இவர் அசைக்க முடியாத அதிகாரம், யாருக்கும் அஞ்சாத சுபாவம், கையில் சுருட்டு, வெறித்தனமாக பேசும் வசனங்கள் என்று ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

படத்தின் கதை:

இவர் வட்டி தொழில் செய்கிறார். தன்னுடைய பிள்ளைகளை தன் நிழலில் வளர விடாமல் இருக்கும் இரும்பு மனுசி. கொடுத்த கடனை கரராக கேட்க கூடியவர். அவர் எப்போ இறப்பார் என்று ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் தங்களுடைய பிள்ளைகளுமே நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவருடைய சொத்துக்காக அவருடைய பிள்ளைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் பவுனுதாயி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருடைய ஒரு கைவிரல் மட்டும் ஏதோ ஜாடை காட்டுகிறது.

அந்த ஜாடையில் ஒளிந்திருக்கும் ரகசியம் யாருக்கும் புரியவில்லை. பின் நகை கடை ஓனர் மூலம் ராதிகா 160 பவுன் நகை வாங்கிய விஷயம் மகன்களுக்கு தெரிய வருகிறது. இதனால் ராதிகா மகன்கள், ராதிகா இறந்தால் அந்த நகை பெண்ணுக்கு போய்விடும் என்று சொல்வதால் அவருடைய இறப்பை தள்ளி வைத்து அந்த நகைகளை எல்லாம் கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள். பின் ராதிகாவின் உயிரையுமே காப்பாற்ற போராடுகிறார்கள். ராதிகாவின் மகன்கள் நினைத்தது போல நடந்ததா? ராதிகா உயிர் பிழைத்தாரா? அவருடைய நகைகளை மகன்கள் கைப்பற்றினார்களா?
என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full