அனிருத் ஹீரோவாக களமிறக்க துடிக்கும் இயக்குனர் - தயாரிக்க ரெடியாக இருக்கும் நடிகர்.

By Rajkumar · 10/6/2020

தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனிருத் ரவிச்சந்திரன். இவர் தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இவர் திரை உலகில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார்.

https://www.instagram.com/p/CBK9R8nBUdl/

மேலும், இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது அனிருத் அவர்கள் டாக்டர், சியான் 60, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பது தவிர்த்து பாடல் பாடுவது, இசை ஆல்பங்களில் நடிப்பது, சில விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அனிரூத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதைப்பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் கூறி இருப்பது, சார் எப்போனாலும் சரி, என்னைக்குன்னாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத் தயாரிப்பாளர் நான் தான் என்று பதிவிட்டு உள்ளார். அதற்கு அனிருத் அவர்கள் நன்றி சார் என்று கமெண்ட் போட்டு இருந்தார்.

அதற்கு டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார், அந்தப் படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கேட்டு வைத்து இருக்கிறேன். அதை மனசில் வச்சுக்கோங்க என்று கூறியுள்ளார். இதை பார்த்த அனிருத் தயவு செய்து முதலில் டாக்டர் படத்தின் பணிகளை முடியுங்கள் என்று கூறியுள்ளார். இப்படி அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப் குமார் ஆகிய மூவரும் மாற்றி மாற்றி பதிவிட்ட கருத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full