பராசக்தி படம் பார்த்து கமல், ரஜினி சொன்ன விமர்சனம் - சக்சஸ் மீட்டில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

By subhashini · 13/1/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.

பராசக்தி படம்:

நேற்று இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன், அதர்வா, சுதா, ஸ்ரீலீலா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=hct_lc94nP8

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்:

அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ரஜினி சார் படத்தை பார்த்துவிட்டு
எனக்கு போன் செய்து பேசினார். ரொம்ப போல்டான படம். படத்தினுடைய இரண்டாம் பாதி சூப்பராக இருக்கு என்று பாராட்டினார். நான் நடித்த டான் படத்திலிருந்து இப்ப வரை தொடர்ச்சியாக என் படங்களை பார்த்து ரஜினி சார் பாராட்டி வருகிறார். கமலஹாசன் சார் பராசக்தி படத்தின் ரிலீஸுக்கு முன்பே பார்த்துவிட்டு பாராட்டினார்.

பிரபலங்கள் பாராட்டு:

அமரன் படம் பார்த்து ரெண்டு நிமிடம் தான் பாராட்டினார். ஆனால், பராசக்தி படத்தை பார்த்து ஐந்து நிமிடத்திற்கு மேல் பாராட்டி பேசி இருந்தார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அதேபோல் நடிகை ராதிகா சரத்குமார் மேம், நீங்கள் படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டே வருகிறீர்கள். நீங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full