விஜய் சார் இத தான் சொன்னார், ஆனால் - பராசக்தி ரிலீஸ் பற்றி சிவகார்திகேயன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.
பராசக்தி படம்:
இந்த படத்தை ஜனவரி 10ஆம் தேதியே வெளியிட இருக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பராசக்தி படம் வெளியாகுவதற்கு முன் முந்தைய நாள் ஜனவரி ஒன்பதாம் தேதி தான் விஜய் நடிக்கும் ஜனநாயகம் படம் வெளியாக இருக்கிறது. இதனால் விஜய்- சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. விஜய், துப்பாக்கியை கொடுத்த உடனே அவரிடத்தில் சிவகார்த்திகேயன் பிடிக்க நினைக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=GhNtdTcesgw
சிவகார்த்திகேயன் பேட்டி:
சிவகார்த்திகேயனை விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஆகாஷ் அக்டோபர் அல்லது டிசம்பரில் தான் படம் ரிலீஸ் ஆகும் என்று சொன்னார். ஆனால், அக்டோபரில் விஜய் சார் படம் வருவதால் பொங்கலுக்கு பராசக்தி படத்தை வெளியிடலாம் என்று ஆகாஷ் பேட்டிகளில் சொல்லியிருந்தார். அதற்குப் பிறகுதான் விஜய் சார் படமும் பொங்கலுக்கு வருகிறது என்ற தகவல் வந்தது.
விஜய் சொன்னது:
நான், தேதியை மாத்தலாமா என்று கேட்டேன். ஆகாஷ், ஏப்ரலில் தேர்தல் வருகிறது. தயாரிப்பு, விநியோகம் என ஏராளமானோர் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்போ மாற்ற முடியாது என்று சொன்னார். விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் ப்ரோவிடம் இதைப்பற்றி பேசினேன். பின் சிறிது நேரத்தில் விஜய் சாரோட உதவியாளர் என்னை அழைத்து, எந்த பிரச்சினையும் இல்லை. சூப்பராக பொங்கலுக்கு வரட்டும். எஸ்கேவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லுங்கள் என்று விஜய் சார் சொன்னதாக சொன்னார். இதுதான் உண்மை. இதுதான் எங்களுக்கிடையில் நடந்தது. இடையில் சிலர் காமெடி செய்கிறார்கள். இது சிலர் வன்மம், சிலருக்கு வியாபாரம் என்று கூறியிருக்கிறார்