என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை - நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல்

By subhashini · 24/2/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி.

இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோருமே ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

தாய் கிழவி படம்:

நான் இந்த சினிமாவிற்கு ஆசையாக தான் வந்தேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை நான் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் .எனக்கு பெயரையும் புகழையும் கொடுத்த இந்த சினிமாவிற்கு நான் திரும்ப செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் இது போன்ற படங்களை தயாரிக்கிறேன். நான் யாருடனும் போட்டிக்காகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை.

https://www.youtube.com/watch?v=QxPBngdY5f4

விழாவில் சிவகார்திகேயன்:

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும் வாழ்க்கையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக என்னை விட்டு விடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது கிடையாது. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. என்னிடம் நிறைய மைனஸ் இருக்கிறது.

சினிமா பற்றி சொன்னது:

அது எல்லாம் பிளஸ் ஆக மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கிறது. மக்கள் ஆரம்பத்தில் இருந்து எனக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் இருக்கும் சிலர் தான் என் வளர்ச்சிக்கு தடைகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி வர நான் தயாராக இருக்கிறேன். அப்படி தடைகளை தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் மாதிரி அண்ணன் நான்கு நபர்களை இந்த துறைக்கு தேடிக்கொண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full