அந்த தருணத்தில் எங்க அப்பாவை உணர்ந்தேன் - மேடையில் கண்கலங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி.
இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிருக்கும் இந்த படம் தாய் கிழவி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தாய் கிழவி படம்:
மேலும், முதல் நாளிலிருந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரே வாரத்தில் தாய் கிழவி படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒரு பெண் கதாபாத்திரம் அதுவும் ஒரு வயதான முதியவர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருப்பது பெரிய சாதனை.
வெற்றி விழாவில் சிவா:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தை தயாரித்திருந்தேன். பிரஸ் ஸோவில் படம் முடியும்போது கார்த்திக் வேணுகோபால் உடைய பெயர் வந்தது. இன்னும் அதை பார்த்து கைதட்டினார்கள். அந்த சமயத்தில் கார்த்திக் வேணுகோபால் உடைய தந்தை எமோஷனல் ஆகி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார். அதே மாதிரியான ஒரு தருணம் மீண்டும் நடந்தது. தாய் கிழவி படத்தை பார்த்த பிறகு சிவகுமார் முருகேசன் உடைய அப்பா எங்கள் இருவரை கட்டி அணைத்துக்கொண்டார்.
https://www.youtube.com/watch?app=desktop&v=SfFOiDT_IyQ
படம் பற்றி சொன்னது:
அந்த செகண்ட் எங்க அப்பா இன்னும் சாகவில்லை என்பதை உணர்ந்தேன். மன்னித்து விடுங்கள் நான் கொஞ்சம் எமோசனலான நபர். அந்த தருணம் எல்லாம் தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. அமரன், தாய்க்கிழவி, கனா படங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது ஒரு நிறைவையும் அமைதியும் கொடுக்கிறது. அந்த அமைதி இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்ற விஷயத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இங்கு வெற்றி என்பது விளையாட்டுக்கு கூட விளையாட்டாக கிடையாது. அதற்காக நிறைய உழைக்க வேண்டும். அதுவும் ஒரு குழுவோடு இணைந்து உடைத்தால் வெற்றி நிச்சியமாக கிடைக்கும் என்பதை இந்த மேடையில் சொல்லி கொடுத்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.