அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சா வெற்றி. ஆனா, அடுத்தவனை என்ன பண்ணலாம்னு யோசிச்சா - Skவின் பேச்சு.

By Rajkumar · 13/3/2024

சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சிவகார்த்திகேயன் சந்தித்த நிலையில் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்ற கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமீப காலமாகவே கோலிவுட்டில் அடுத்த தளபதி யார்? என்ற கேள்வி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல விவாதங்கள் தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் தளபதி விஜய் அவர்கள் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி தன்னுடைய அரசியல் பணியை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவித்திருந்தார்.

https://twitter.com/SKFC_Videos/status/1767558471250223134

அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருவதால் இனி விஜய் அவர்கள் சினிமாவில் நீடிப்பதில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் கோலிவுட்டின் அடுத்த தளபதி யார்? என்ற டாபிக் தான் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர்களில் ஒருவர் தான் அடுத்த தளபதி என்றெல்லாம் விவாதிக்க தொடங்கி விட்டார்கள்.

அடுத்த தளபதி :

அதில் முதலில் சிவகார்த்திகேயன் பெயர்தான் அடிபட்டு இருக்கிறது. சமீப காலமாகவே சிவகார்த்திகேயனுடைய நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் பேன்ஸ் மீட் ஒன்றை நடத்தி இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த பேன்ஸ் மீட்டில் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்க்க வந்திருக்கிறார்கள்.

வைரலாகும் வீடியோ:

சொல்லப்போனால், விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமோ அதே அளவுக்கு நிகராகவே சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் போலையே என்று ஹாஸ்டேக் உருவாக்கி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் பேசியது என்ன :

இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள சிவகார்திகேயன் ' அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சா வெற்றி. ஆனா, அடுத்தவனை என்ன பண்ணலாம்னு யோசிச்சா ஒன்னும் கிடைக்காது' என்று பேசி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிவா நன்றி தெரிவித்ததாகவும், தொடர்ந்து வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Skவின் அடுத்த படங்கள் :

டைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full