இந்த படத்தில் நடிக்க முதல் காரணமே இவங்க தான் - 'பராசக்தி' பட நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

By subhashini · 19/12/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றிருக்கிறது.

பராசக்தி படம்:

இதில் பட குழுவினர் அனைவருமே கலந்துகொண்டு படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன், 60களில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதையை சுதா மேம் அமைத்திருக்கிறார்கள். இந்த படத்தை செய்வதற்கான முதல் காரணமே சுதா மேடம் தான். அவர்களுடன் படம் நடிக்கணும் என்று முடிவெடுத்த பிறகுதான் நான் கதையை கேட்டேன். இந்த கதையை நான் கேட்டதுக்கு பிறகு நான் படத்துக்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய தேவையில்லை என்று தோன்றியது. ஏன்னா, சுதா மேடம் கிட்டத்தட்ட இந்த கதையில் ஒரு டிகிரி முடித்திருக்கிறார்கள்.

விழாவில் சிவகார்த்திகேயன்:

அவர்கள் சொல்வதை செய்தால் போதும் என்று இருந்தது. சோதனையை சந்தித்தால்தான் சாதனையின்னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி இந்த படம் அப்படியான ஒரு சாதனையாக தான் இருக்கும்னு நான் நம்புகிறேன். அவ்வளவு விஷயங்களை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். எனக்கும் அதர்வா ப்ரோவிற்கும் சாப்பாட்டில் தான் கனெக்சன். என்னை ஸ்வீட் சாப்பிட வைத்துவிட்ட பிறகு அவர் மட்டும் ஒர்க் அவுட் செய்துவிடுவார். நான் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது அதர்வா பிரதர் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனுக்கு முரளி சாரோட வந்திருக்கிறார். இன்னைக்கு அவருடன் இணைந்து நான் இந்த படத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது.

https://www.youtube.com/watch?v=22dTJe5FzjE

படம் பற்றி சொன்னது:

பெர்ஃபார்மன்ஸ் ஐ தாண்டி முயற்சி இருந்தால் தமிழ் ரசிகர்கள் மேலே கொண்டுவந்து உட்கார வைத்து விடுவார்கள். ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் நடித்த பிறகு வில்லனாக நடிக்கிற முடிவை எடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம். ரவி இந்த படத்துக்கு தான் வில்லன். எனக்கு எப்போதுமே நான் காலேஜில் பார்த்த வியந்த ஹீரோ தான். இந்த மாதிரியான படக்குழு, இந்த படத்தின் டைட்டில் எல்லாமே கிடைத்திருப்பது அந்த பராசக்தியின் அருள் தான் என்று நினைக்கிறேன். இந்த படம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பிரச்சனையை பேசும். அது கூடவே காதல், வீரம், பாசம், புரட்சி என்று எல்லாமே பேசுகிற படமாக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full