சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' கொழுந்து விட்டு எரிந்ததா? அணைந்ததா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 10/1/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர்
சிவகார்த்திகேயன். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லிலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா இயக்கியிருக்கிறார்.
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன்
போராடுகிறார். படத்தினுடைய ஆரம்பத்தில் ஒரு ரயிலை எரிக்கிறார்கள் அதை தொடர்ந்து ரவி மோகன் இந்த கும்பலை பிடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இந்த ரயில் எரிப்பில் இறந்து போகிறார். இதனால் இனி இந்த வன்முறை எதிர்ப்பு எதுவுமே நடக்கக்கூடாது என்று சிவகார்த்திகேயன் அனைத்தையும் கைவிடுகிறார்.

இருந்தாலும் அவருடைய தம்பி அதர்வா வன்முறையை கையில் எடுத்து போராடுகிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் இந்தி படித்து டெல்லிக்கு வேலைக்கு செல்ல நினைக்கிறார். அப்போது இந்தி படித்தால் தான் இனி வேலை என்ற நிலை உருவாகிறது. பின் சிவகார்த்திகேயன் கண்முன்னே ஒரு இளைஞன் இறக்கிறார். சிவகார்த்திகேயனுக்கும் வேலை கிடைக்காமல் போகிறது. பின் மீண்டும் தன்னுடைய போராட்டத்தை சிவகார்த்திகேயன் கையில் எடுக்கிறார்.

இறுதியில் சிவகார்த்திகேயன் வென்றாரா? ரவி மோகன் இவர்களை பிடித்தாரா? அதர்வா என்ன ஆனார்? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. இந்த படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயன் செழியனாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். வாழ்க்கையே ஒரு போராட்டம் தான் என்று சிவகார்த்திகேயன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பின் இவர் ஒருவருடைய இழப்பினால் போராட்டத்தை விட்டு வேலை தேடி செல்கிறார். பின் மீண்டும் அந்தப் போராட்டத்தில் சிவகார்த்திகேயன் குதிக்கிறார்.

கடைசிவரை இவர் தன் போராட்டத்தினால் பல மடங்கு உயர்ந்து விட்டார். பல காட்சிகளில் இவருடைய நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக சிவாவிற்கு ஒரு மைல் கல்லாக அமையும். இவரை அடுத்து படத்தில் வில்லனாக ரவி மோகன் வருகிறார். இவர் படம் முழுக்க அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு அதிகாரியாக தான் இருக்கிறார். அதர்வா இந்த படத்தில் எனர்ஜி பூஸ்ட் இளைஞனாக வருகிறார். ஸ்ரீலீலா இந்த படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகம். இருந்தாலுமே தன்னுடைய சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகள் என்று பொறுமையாக செல்கிறது. இரண்டாம் பாதியில் தான் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் ஸ்ரீலீலா ஸ்கோர் செய்திருக்கிறார். படம் முழுக்க இந்தி திணிப்புக்கு எதிரானது என்பதால் இது பர வரலாற்று நிகழ்வுகள் கற்பனை, சித்தரிக்கப்பட்டவையாக இருந்தது. அதோடு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள் தான். இந்த படத்தின் மூலம் நாம் எல்லோரையும் 60 காலகட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்திருப்பது மிகப்பெரிய பாராட்டுகுரிய ஒன்று. பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. டெக்னிக்கலாக இந்த படம் அட்டகாசமாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் பராசக்தி இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் நடிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பு அட்டகாசம்

டெக்னிக்கல் ஒர்க் நன்றாக இருக்கிறது

வசனங்கள் அட்டகாசம்

இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

குறை:

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

சில காதல் காட்சிகளை நீக்கி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

பராசக்தி - தமிழர்களின் தீ

behindtalkies AMP · Quick view
View full