நேரில் பார்க்க ஏங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம், நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்

By subhashini · 20/2/2024

தன்னுடைய ரசிகருக்காக சிவகார்த்திகேயன் செய்திருக்கும் செயல தான் தற்போது இணையத்தில் வைரலாகி
வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

மேலும், கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருக்கிறார்கள். ஏலியன் ஜனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

அமரன் படம்:

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அமரன் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது.

சிவா நடிக்கும் படங்கள்:

இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ருக்மணி வசந்த், மோகன்லால், வித்யூத் ஜம்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்திற்கான பூஜைகள் போடப்பட்டது. தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதை முடித்துவிட்டு கமிட்டாகி இருக்கும் இன்னும் சில படங்களில் சிவா நடிக்க இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் சிவா தன்னுடைய ரசிகைக்கு கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=h-ZhIHlVwtI

சிவா கொடுத்த சப்ரைஸ்:

அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருப்பவர் தன்ஸீரா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு சிவகார்த்திகேயன் என்றால் ரொம்பவே பிடிக்கும். அவரை ஒரு முறையாவது பார்த்து விடமாட்டோமா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்ஸீராவிற்கு சர்ப்ரைஸ் ஆக சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full